டீ கடை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
டீ கடை

அ முதல் அஃகு வரை விவாதிக்கலாம்.

நல்வரவு
புதுமையான இந்த கருத்துக்களத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
Latest topics
» டீசல் - பெட்ரோல்
பாரத சமுதாயம் வாழ்கவே! EmptySat Jan 11, 2014 8:06 pm by neechalkaran

» டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்
பாரத சமுதாயம் வாழ்கவே! EmptyThu Dec 26, 2013 12:08 am by neechalkaran

» இராகங்களும் பாடல்களும்
பாரத சமுதாயம் வாழ்கவே! EmptyThu Dec 26, 2013 12:04 am by neechalkaran

» பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி.
பாரத சமுதாயம் வாழ்கவே! EmptyWed Dec 25, 2013 11:48 pm by neechalkaran

» பாரத சமுதாயம் வாழ்கவே!
பாரத சமுதாயம் வாழ்கவே! EmptyFri Aug 06, 2010 11:07 pm by madan

» Your first subject
பாரத சமுதாயம் வாழ்கவே! EmptyWed Jul 28, 2010 8:52 pm by Admin

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search


You are not connected. Please login or register

பாரத சமுதாயம் வாழ்கவே!

Go down  Message [Page 1 of 1]

madan



பல்லவி
பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய (பாரத)
அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)
சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கம்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின் றித்தரு நாடு-இது
கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)

2.
இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)

3.
"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க! (பாரத)

4.
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க (பாரத)
ராகம்-பியாக் தாளம்-திஸ்ர ஏகதாளம்

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum